GNOME கணிப்பான்

கணித, அறிவியல் அல்லது பொருளாதார கணக்குகளை செய்கிறது.

GNOME கால்குலேட்டர் என்பது கணித சமன்பாடுகளைத் தீர்ப்பதற்கான ஒரு பயன்பாடு. முதலில் இது தொடங்கும் போது அடிப்படை எண் கணித செயல்பாடுகளை அளிக்கும் எளியகணிப்பானாகவே காட்சியளிக்கும், ஆனால் அதை நீங்கள் மேம்பட்ட, நிதி அம்சங்கள் கொண்ட அல்லது நிரலாக்கப் பயன்முறையிலான கணிப்பானாக மாற்றிக்கொள்ளலாம், அப்போது அதன் அளப்பரிய திறன்களைக் கண்டு வியந்துபோவீர்கள்.

மேம்பட்ட கணிப்பானில் மடக்கைகள், காரணியங்கள், முக்கோணவியல் மற்றும் பரவளைய சார்புகள், மட்டு வகுத்தல், சிக்கலெண்கள், சமவாய்ப்பு எண் உருவாக்கம், முதல் நிலை காரணியாக்கம் மற்றும் அலகு மாற்றங்கள் போன்றவை உள்ளிட்ட பல செயலம்சங்கள் உள்ளன.

நிதி அம்ச கணிப்பானில், காலமுறை வட்டிவீதம், தற்கால மற்றும் எதிர்கால மதிப்பு, இரட்டை சாய்வு மற்றும் நேர்க்கோட்டுத் தேய்மானம் போன்றவை உள்ளிட்ட பல கணக்கீடுகளைச் செய்ய முடியும்.

நிரலாக்க பயன்முறையில் பொதுவான அடிமானங்களுக்கு இடையிலான மாற்றம் (ஈருறுப்பு, எண்மம், தசமம் மற்றும் ஹெக்சா தசமம் போன்றவை), பூலியன் அல்ஜீப்ரா, ஒன்றுகள் மற்றும் இரண்டுகள் நிரப்பல், எழுத்திலிருந்து எழுத்துக்கான குறியீட்டு மாற்றம் போன்ற பல செயல்களைச் செய்ய முடியும்.

Get involved

Explore the interface

Get to know us

More Information

Learn more

Visit the online help page for this app.

Project homepage

Visit the dedicated homepage for this project.

Newest Release

Latest version 40.1 released on 30 ஏப்ரல், 2021.

Partially translated

Some parts of this app are available in your language.